மரத்திலிருந்து விழுந்த ரயில்வே ஊழியர் சாவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் பணியின் போது மரத்தில் இருந்து விழுந்த ரயில்வே ஊழியர் உயிரிழந்தார்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனுாரை சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் அருண்பிரகாஷ்,38; இவர், விழுப்புரத்தில் ரயில்வே துறையில் எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்தார்.

கடந்த செப்., 29 ம் தேதி விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனி மைதானம் அருகேவுள்ள மின் கம்பியில் மரங்கள் தடுத்ததையொட்டி, அருண்பிரகாஷ் வேப்பமரத்தில் ஏறி கிளைகளை வெட்டியுள்ளார். அப்போது திடீரென அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கழுத்து, இடுப்பு பகுதிகளில் காயமடைந்தார். அவரை, சக ஊழியர்கள் மீட்டு மதகடிபட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

சிகிச்சையில் இருந்த அருண்பிரகாஷ் நேற்று முன்தினம் பலனின்றி பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement