ரவுடிக்கு ஜாமினை ரத்து செய்து மீண்டும் கைது
விருத்தாசலம்: விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் தினசரி கையெழுத்து போடாத ரவுடியின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம் மணலுார் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் நவீன், 22. ரவுடியான இவர், கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தார்.
விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் தினசரி கையெழுத்து போட்டு வந்த நவீன், திடீரென கையெழுத்து போடுவதை தவிர்த்தார்.
அதனால், அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி இன்ஸ்பெக்டர் சந்துரு, விருத்தாசலம் மாஜிஸ்திரேட் எண் 1ல், மனுதாக்கல் செய்தார்.
மனுவை ஏற்ற மாஜிஸ்திரேட், நவீன் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டார். அதன்பேரில், ரவுடி நவீனை போலீசார் நேற்று கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement