ஆட்சிக்கு கிடைத் வெற்றி முதல்வர் ரங்கசாமி பெருமிதம்

புதுச்சேரி: தட்டாஞ்சாடி இடைத்தேர்தல் வெற்றி, ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில், என்.ஆர்.காங்., சார்பில் அசோக் ஆனந்த் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின் அவர் வெற்றி பெற்ற சான்றிதழை முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். பின், முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது எங்கள் ஆட்சிக்கு கிடைத்த பெரும் வெற்றி. வாக்கு அளித்த தட்டாஞ்சாவடி தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய எம்.எல்.ஏ., தொகுதியின் மேம்பாட்டிற்காகச் சிறந்த முறையில் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர் செயல்படுவார் என கூறினார். இடைத்தேர்தல் வெற்றியை கூட்டணி கட்சியினர் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Advertisement