கடற்கரையில் மாயமான குழந்தை மீட்பு

புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலா வந்த பயணிகளின் காணமால் போன குழந்தைய மீட்ட போலீசாருக்கு பாராட்டு குவிந்தது.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் புதுச்சேரி வந்தனர். பெரிய வீராம்பட்டினம் கடற்கரைக்கு சென்ற சுற்றுலா பயணிகள், மாலை 5:00 மணியளவில் கடற்கரையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுடன் வந்த 5 வயது குழந்தை விளையாடிக் கொண்டே தனியாக நடந்து சென்று திடீரென மாயமானது. தகவல் அறிந்த சுற்றுலா பயணிகள் பதறினர். அங்கும் இங்குமாக ஓடி குழந்தையை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்த கடலோர ரோந்துப் பிரிவு போலீசார் குழந்தையை தேடினர். அப்போது அங்கு வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அளித்த தகவலின் பேரில், கடற்கரைக்கு பின்புறம் உள்ள ஒதுக்குப்புறமான தோப்புப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை மாலை 6:10 மணியளவில் பத்திரமாக மீட்டு, பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

குழந்தையை விரைவாக மீட்ட போலீஸ் கான்ஸ்டபிள் மணிகண்டன், ஊர்க்காவல் படை வீரர் சரண்ராஜ் ஆகியோருக்கு ஆந்திர மாநில சுற்றுலா பயணிகள் நன்றி கூறினர்.

Advertisement