தாய், பாட்டியை தாக்கியவர் கைது

பண்ருட்டி: குடிக்க பணம் தராததால் தாய், பாட்டியை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் முல்லை நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ராஜி,24; பெயிண்டர். இவர் கடந்த 8 ம் தேதி இரவு மது குடிக்க, தனது தாய் குமாரியிடம் பணம் கேட்டார். அவர் இல்லை என்றதால் அவரை தாக்கினார். அதனை தடுக்க வந்த பாட்டி எல்லம்மாள்,70; தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து குமாரி அளித்த புகாரின்பேரில் பண்ரட்டி போலீசார் வழக்கு பதிந்து, ராஜியை கைது செய்தனர்.

Advertisement