சிறுமியிடம் சீண்டியவர் போக்சோ சட்டத்தில் கைது
ஓமலுார்: ஓமலுார் அருகே அரசு பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கும், 7 வயது சிறுமி, நேற்று முன்தினம் வீடு முன் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தார். அங்கு வந்த ஒருவர், சிறுமியிடம் சில்மிஷம் செய்தார். சிறுமி அழுதபடி சென்று, பெற்றோரிடம் தெரிவித்தார்.
உடனே பெற்றோர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன், அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து பெற்றோர் புகார்படி, ஓமலுார் மகளிர் போலீசார் விசாரணையில், அவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி அபிமன்னன், 34, என தெரிந்தது. அவரை, போக்சோ சட்டத்தில் நேற்று, போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement