பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

கெங்கவல்லி; பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் மக்காச்சோளம் ஏக்கருக்கு பிரீமியம் தொகை, 491 ரூபாய்; பருத்தி, 691 ரூபாய்; நெல், 580 ரூபாய். மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு, அக்., 31 வரையும், நெல் பயிருக்கு, நவ., 15 வரையும் பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

அதற்கு விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அருகே உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலம், தொகையை செலுத்த வேண்டும். விபரங்களுக்கு வேளாண் விரிவாக்க மையம் மூலம் தொடர்பு கொள்ளலாம் என, கெங்கவல்லி வேளாண் உதவி இயக்குனர் மோகனசரிதா தெரிவித்துள்ளார்.

Advertisement