மரக்கன்றுகளை பாதுகாக்க கூண்டுகள் வடிவமைப்பு

மேட்டூர்: சேலம் வன விரிவாக்க மையம் சார்பில் சேலம் மாவட்டம் முழுதும் மாநில நெடுஞ்சாலையோரம், 20,000 மரக்கன்று நடும் பணி கடந்த, 30ல் தொடங்கியது. அவற்றை கூண்டுகள் வைத்து பாதுகாக்க, நேற்று பண்ருட்டியில் இருந்து, 550 மூங்கில் தட்டிகள், லாரி மூலம் மேட்டூர் வனச்சரக அலுவலக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த தட்டிகளை தொழிலாளர்கள் இறக்கி, கூண்டுகள் போல் வடிவமைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட வன விரிவாக்க மைய வனச்சரகர் காயத்ரி கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலையோரம், 15 அடிக்கு ஒன்று வீதம், 20,000 மரக்கன்று நடும் பணி, நவ., 15க்குள் நிறைவடையும். நாவல், புங்கன், வேம்பு, நீர்மருது, அத்தி, மந்தாரை, புளியன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படுகின்றன. முதல் கட்டமாக, 650 மரக்கன்று கள் நடப்பட்டுள்ளன. அந்த கன்றுகளை பாதுகாக்க சுற்றிலும் மூங்கில் குச்சிகளால் உருவாக்கப்பட்ட கூண்டு அமைத்து, தண்ணீர் தெளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement