145 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.64,000 அபராதம்
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் உத்தரவின்படி, மாநகர நல அலுவலர் அஜிதா தலைமையில், மாநகராட்சிக்கு
உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கவர்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க, மாநகராட்சி
ஊழியர்கள் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
இதில், பல்வேறு கடைகளில் பயன்படுத்த வைத்திருந்த மொத்தம், 145 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கடை உரிமையாளர்களிடமிருந்து, 64,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள், பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என்றும், விதிமுறைகளை மீறும் வணிகர்கள், பொதுமக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல் தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
-
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
Advertisement
Advertisement