விற்பனைக்கு 42 மனை விண்ணப்பிக்க அழைப்பு

ஓசூர்; தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், ஓசூர் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் பாண்டியராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், ஓசூர் வீட்டு வசதி பிரிவிற்கு உட்பட்ட, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில், வணிக மனைகள், பொது உபயோக மனைகள், பள்ளிக்கூட மனைகள் மற்றும் கடை மனைகள் என, 42 மனைகள் விற்பனைக்கு உள்ளன. இந்த மனைகள், மின்னணு ஏலம் விடப்பட உள்ளதால், பொதுமக்கள் வரும், 15ம் தேதிக்குள் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களை, www.tnhb.gov.in, http://www.tnhb.gov.in மற்றும் https://tntenders.gov.in என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement