மாடியிலிருந்து தவறி விழுந்த மேஸ்திரி பலி
ஓசூர்: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே குன்னுார் கிராமத்தை சேர்ந்தவர் பரமன், 50, கட்டட மேஸ்திரி; இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோகுல் நகரில், புதிதாக நடக்கும் கட்டுமான பணியை மேற்கொண்டு, அங்கேயே
தங்கியிருந்தார்.
கடந்த, 5ம் தேதி அதிகாலை, 4:50 மணிக்கு, ஐந்தாவது மாடியில் துாங்கி கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட சக தொழிலாளர்கள், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரமன், நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement