மனைவி மாயம் கணவன் புகார்

ஈரோடு:ஈரோடு, பீ.பி.அக்ரஹாரம், நஞ்சப்பா நகரை சேர்ந்தவர் குணசேகரன், 37; டையிங் கம்பெனி ஊழியர். இவரின் மனைவி நந்தினி, 27; அழகு நிலையத்தில் வேலை செய்தார்.

நந்தினி அதிக நேரம் மொபைல்போனை பார்த்ததால், கணவன், மனைவிக்குள் பிரச்னை எழுந்தது. கடந்த, 7ல் வேலைக்கு சென்ற நந்தினி மாயமானார். குணசேகரன் புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement