இலவச பயிற்சி வகுப்பு பயிற்றுனருக்கு அழைப்பு

ஈரோடு,:ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், அரசு போட்டி தேர்வு

களுக்கு இலவச பயிற்சி வகுப்பு, சிறந்த ஆசிரியர்கள் மூலம் தரப்படுகிறது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், புவியியல், வரலாறு, அரசியலமைப்பு, பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம், தமிழ்நாட்டில் வரலாறு பண்பாடு மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், நுண்ணறிவு, திறனறிவு, காரண
வியல், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பாடங்களில் பயிற்சி வகுப்புகளையும், எஸ்.எஸ்.சி., - பாங்கிங், ஆர்.ஆர்.பி., தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை திறம்பட நடத்த தகுதியான பயிற்றுனர்கள் தேவைப்படுகின்றனர்.
பயிற்றுனர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு, 800 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும். தகுதி, விருப்பம் உள்ளோர், தங்கள் புகைப்படத்துடன், சுய விபர குறிப்பை நேரில் அல்லது அஞ்சல் மூலம், 'உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், அரசு ஐ.டி.ஐ., அருகே, சென்னிமலை சாலை, ஈரோடு-9' என்ற முகவரிக்கு வரும், 12 க்குள் விண்ணப்பிக்கலாம். 0424 2275860, 94990 55943 என்ற எண்ணில் கூடுதல் விபரம் அறியலாம்.

Advertisement