மகளை பார்க்க முடியாத விரக்தி; தந்தை தற்கொலை

ஈரோடு:ஈரோடு பழையபாளையம், அணைக்கட்டு சாலை பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப், 32; தொழிலாளி. இவரின் மனைவி ரியான். தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.

அஷ்ரப்புக்கு குடிப்பழக்கம் இருந்ததால், ரியான் கோபித்து கொண்டு திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். கடந்த, 7ம் தேதி மனைவிக்கு போன் செய்து மகளை தன்னிடம் காட்டிவிட்டு செல்லும்படி அஷ்ரப் கேட்டு கொண்டார். அப்போதும் வாக்குவாதம் ஏற்பட்டது. மகளை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தில், விஷ மாத்திரை தின்று அஷ்ரப் அலி தற்கொலை செய்து கொண்டார். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement