கள்ளச்சாராய தடுப்பு சட்டத்தில் விவசாயி கைது

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்னகொத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன், 52, விவசாயி; இவர் தனது நிலத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருப்பதாக, சூளகிரி போலீசாருக்கு கடந்த மாதம், 13ம் தேதி தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சென்னகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடமிருந்து, 15 லிட்டர் ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. 2 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னகிருஷ்ணனை, கள்ளச்சாராய தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, மாவட்ட எஸ்.பி., அனிதா பரிந்துரை செய்தார். அதையேற்று, கள்ளச்சாராய தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். அதற்கான நகல், சேலம் மத்திய சிறையில் உள்ள சென்னகிருஷ்ணனிடம் நேற்று வழங்கப்பட்டது.

Advertisement