போலி நகையை அடகு வைக்க முயன்றவர் கைது

அந்தியூர்:அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள நகை அடகு கடைக்கு, ஈரோடு திண்டலை சேர்ந்த சலாம், 55; அந்தியூர் மொடக்குறிச்சியானூரை சேர்ந்த வேலுமணி, 47; என்ற பெண்ணுடன், நேற்று மாலை சென்றார்.

ஒரு மோதிரத்தை அடமானம் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மோதிரத்தை சோதனை செய்ததில் கவரிங் என தெரிந்தது. இதையடுத்து தப்பிச்செல்ல முயன்ற இருவரையும் கடை உரிமையாளர்கள் பிடித்து, அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பிறகு இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேசமயம் சலாமை மட்டும், பவானி ஜே.எம்., கோட்டில் ஆஜர்
படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர். வேலுமணியிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

Advertisement