தீயணைப்பு நிலையம் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

கரூர்:வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், கரூர் தீயணைப்பு நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்நடந்தது.

தென்னிந்திய பகுதிகளான தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையின் போது, வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பொருட்டு செயல்படுவது குறித்து, கரூர் தீயணைப்பு நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

அதில், தீயணைப்பு உபகரணங்கள் குறித்தும், பயன்பாடுகள் குறித்தும், பள்ளி மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில், கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

Advertisement