சேரன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
கரூர்:கரூர்
அருகே, வெண்ணைமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில்,
வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், நாட்டு நலப்பணித்
திட்ட சிறப்பு முகாம் நடந்தது. பள்ளி தாளாளர் பாண்டியன் தலைமை
வகித்தார். கோவில் செயல் அலுவலர் சுகன்யா முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில்
பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பாலசுப்பிரமணிய
சுவாமி கோவில் சுற்றுப்புறப் பகுதிகளில் துாய்மை பணிகளை
மேற்கொண்டனர். மேலும், கோவில் வளாகத்தில் உழவாரப் பணிகளையும்
செய்தனர். கோவில் மற்றும் சுற்றுப்புறங்களை துாய்மைப்படுத்தி
சிறப்பான சமூக பணியாற்றிய என்.எஸ்.எஸ்., மாணவர்களை பாராட்டி,
ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பழனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் திருடியவருக்கு வலை
-
பா.ம.க., சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
-
இன்று (அக்.10) மகாளய அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நம் கடமை!
-
காவிரியாற்றில் பெண் உடல் போலீசார் தீவிர விசாரணை
-
த.வெ.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
-
பனாமாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 7.7 ஆக பதிவு
Advertisement
Advertisement