த.வெ.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கரூர்:தாராபுரம்,
மதுராந்தகம் இடைத்தேர்தலில், த.வெ.க., வெற்றி பெற்றதால், கரூரில்
அக்கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கடந்த,
4ல், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டசபை தொகுதிகளுக்கு
இடைத்தேர்தல் நடந்தது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதில்,
த.வெ.க., சார்பில் தாராபுரத்தில் போட்டியிட்ட சத்யபாமா,
மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து,
கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று மாலை த.வெ.க.,வினர் பட்டாசு
வெடித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிறகு, பொதுமக்களுக்கு
இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க.,
பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர்கள்
நெடுஞ்செழியன்,
சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் திருடியவருக்கு வலை
-
பா.ம.க., சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
-
இன்று (அக்.10) மகாளய அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நம் கடமை!
-
காவிரியாற்றில் பெண் உடல் போலீசார் தீவிர விசாரணை
-
சேரன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
-
பனாமாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 7.7 ஆக பதிவு
Advertisement
Advertisement