காவிரியாற்றில் பெண் உடல் போலீசார் தீவிர விசாரணை

கரூர்:கரூர் அருகே, காவிரியாற்றில் பெண் உடலை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், கட்டளை காவிரியாற்று பகுதியில் நேற்று முன்தினம், 60 வயது பெண் உடல் கிடந்தது. இதுகுறித்து, ரங்கநாதபுரம் வடக்கு வி.ஏ.ஓ., வினோத்குமார் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, மாயனுார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அடையாளம் தெரியாத பெண் உடலை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement