அனைவரும் கேள்வி கேட்கணும்: சென்னையில் ராகுல் பேசியது இதுதான்
- நமது நிருபர் -
'தமிழகத்தை தொட விட மாட்டோம். அனைவரும் கேள்வி கேட்க வேண்டும்,' என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார்.
சென்னை தீவுத்திடலில் நடந்த மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியில் அவர் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
அவர் பேசியதாவது; தமிழக மக்கள் மீது ஹிந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். தமிழ் கலாசாரம், தமிழ் மொழி, வரலாறு அனைத்தும் 2வது பட்சம் என்றும், ஹிந்தி மொழி தான் முதன்மையானது என்று அவர்கள் வெளிப்படையாக கூறுகின்றனர். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான், தமிழகத்திற்கான ரூ.3,500 கோடியை விடுவிப்போம் என்று இருக்கின்றனர்.
நீட் தேர்வினால் 87 சதவீதம் தமிழ் மாணவர்களின் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்கு செல்கிறது. 70 சதவீத மாநில பல்கலைகளில் துணை வேந்தர் இல்லாமல் இருக்கிறது. காரணம் கவர்னர் தான். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால் பல்கலைகளை நடத்த நினைக்கிறார்.
தொகுதி மறுவரையறை மூலம் தமிழக குரலை ஒடுக்க முயற்சிக்கிறார்கள். தமிழக பிரதிநிதித்துவத்தை குறைக்க தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு கொண்டு வருகிறது. தமிழ் கலாசாரம் மீதான தாக்குதலை அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தை தொட விட மாட்டோம். அனைவரும் கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்கும் உரிமையை அரசியலமைப்பு வழங்குகிறது.
டில்லி நகரம் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போலீசார் மாணவர்களை தாக்குகின்றனர். மாணவர்கள் போராட்டம் எதற்காக நடக்கிறது என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை. கடந்த 15 ஆண்டாக நாடகத்தை நடத்தி வருகிறார்கள். நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் தாக்குவதற்கு ஒருவரையும் அனுமதிக்க மாட்டோம். நாட்டின் ஜனநாயகத்தை பிரதமர் மோடி சீரழிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்
அம்மா சோனியா அம்மா உன் பையனுக்கு எதுவுமே சொல்லலி கொடுத்து வளர்க்களையா ?
துரோகி இந்த நாட்டையும் மக்களையும் பழய மாதிரி வறுமைக்கு தள்ளபார்கிறாய், நாட்டு நலனிற்கு எதிராக வெளிநாடுகளுடன் /நிறுவணங்களுடன் கள்ள தொடர்பு ..... மீண்டும் அடிமையாக்க விடமாட்டோம்
நீ ஒரிஜினல் இந்தியனா ? மஸ்க் உடன் கூட்டு சேர்ந்து தேச துரோக செயல்களில் ஈடுபடும் உன் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.. கடைசி வரை இப்படியே நடித்து விட்டு திரிய வேண்டியது தான்..
/நீட் தேர்வினால் 87 சதவீதம் தமிழ் மாணவர்களின் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்கு செல்கிறது/ - எவ்வளவு பெரிய பொய்ய கூசாம பேசுறாங்க. நீட்ட கொண்டு வந்ததே இந்த பொய்யர் கூட்டம் தான். இந்த பொய்ய மக்களில் கொஞ்சம்பேர் நம்புவதுதான் வருத்தமாக உள்ளது.
Just remind as a Liar. Worried about his followers.
ஹிந்தியை நாட்டின் அலுவல் மொழியாக ஆக்கியது உங்க காங் கட்சி. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்கியது உங்க கட்சி.
இதில் ஒரு தலைவருக்கான பொறுப்பு என்பது ஒரு துளி கூட இல்லை ஆனால் வெறுப்பு 100% தெரிகிறது. இந்தியை திணித்தது காங்கிரஸ், டெல்லியில் போராடுவது மாணவர்கள் அமைப்பு இல்லை. கரப்பான்களுக்கு இந்த நாட்டில் எந்த அங்கீகாரமும் கிடையாது. காங்கிரஸ் ஒரு தேச விரோத அமைப்பு என்று மறுபடியும் ஒரு முறை நிரூபித்து விட்டார். அது சரி ஈழ தமிழ் மக்களை கொல்ல ஆயுதம், ராணுவ உதவி கொடுத்த தமிழின துரோகி காங்கிரஸ் கட்சிக்கு தமிழ் மண்ணில் பேச இடம் கொடுத்தவன் எல்லாம் என்ன தமிழனா!?
அய்யா அறிவாளியே உங்களது அழிவை நீங்களே தேடிக் கொள்ளும் பேச்சுதான் இது. உங்களது ஹிந்தி எதிர்ப்பு பேச்சு நாளை வட மாநிலங்களுக்கும் பரவும். வடக்கில் உங்களுக்கு கிடைக்கும் ஒன்றிரண்டு சீட்டுகளும் நிச்சயம் பறிபோகும்.
பதவி கிடைக்காமல் நான் பைத்தியமாகி விட்டேன். நீங்களும் என்னை போலவே கேள்வி கேட்டு பைத்தியமாகி விடுங்கள்
திரு ராகுல் அவர்களே உங்களது இந்த பேச்சு ஒரு கண்ணியமற்ற பேச்சாகவும் முதிர்ச்சியற்ற பேச்சா தான் தெரிகிறது. நாட்டில் சில நபர்கள் செய்யும் தவறுகளுக்கு துணை போக கூடாது. நாட்டின் இறையாண்மை மிகவும் முக்கியம். எதிர்க்கட்சி என்பதால் எதையும் எதிர்க்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. ஒரு சிறந்த எதிர்க்கட்சியாக நாட்டுக்கும், மக்களுக்கும் நல்ல விதத்தில் நீங்கள் பணியாற்றினால் காங்கிரஸ் மீண்டும் பிரதமர் என்று அரியாசனத்தில் அமர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதை விடுத்து தரக்குறைவாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும் பேச வேண்டாம். அது யாராக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் அவ்வாறு பேசக்கூடாது. காங்கிரசின் பாரம்பரத்தை பாதுகாக்கவும். 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசியல் நிலை வேறு, இப்போது இருக்கும் அரசியல் நிலை வேறு. காலத்திற்கு தகுந்தார் போல் காங்கிரஸ் கட்சியும் தன்னை உத்வேகப்படுத்திக் கொள்ள வேண்டும். புதியனவற்றை சிந்திக்க வேண்டும். வெறுமனே மோடி என்ற ஒரு தனி நபரை எதிர்ப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை.அதே போல் இந்தியாவில் உள்ள இந்திய தொழில் அதிபர்களையும், வளரும் இந்திய தொழில் அதிபர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொரு இந்தியனின் கடமை. ஒவ்வொரு வெற்றிகரமான தொழில் அதிபர்களுக்கு பின்னால், அவர்களுடைய கடுமையான உழைப்பும், சவால்களும், வெற்றி தோல்விகளும், பல தியாகங்களும் உள்ளது. யாரும் ஒரே இரவில் பில்லினர் என்ற தொழில் அதிபர் ஆக முடியாது. பெரும்பாலான வெளிநாடுகள் தங்களது உள்நாட்டு நிறுவனத்தை அதிகமாக பொக்கிஷமாக பாதுகாக்கிறது. அந்நிறுவனத்தின் சிரமமான காலத்தில் கை கோர்த்து, தோள் கொடுத்து தூக்கி விடுகிறது. ஆனால் அவ்வாறு இந்தியாவில் நடப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு முறை இந்திய தொழில் நிறுவனம் மூடப்படும் போது அல்லது வெளிநாட்டு கம்பெனிக்கு விற்கப்படும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்... நல்லதே பேசுவோம் நல்லதே நடக்கும். ஜெய்ஹிந்த்மேலும்
-
பிரதமர் வருகை எதிரொலி; நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்
-
சவுதி விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்; விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்
-
2017ல் முளைத்த பயங்கரவாத சிந்தனை; பிளைதுபாய் துணை விமானியின் திட்டம் அம்பலம்
-
உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை :கடத்தப்பட்ட 5.64 லட்சம் கிலோ அரிசி மீட்பு
-
‘21,060 மரக்கன்றுகளை நட்டதற்கு ஆதாரமில்லை’
-
அரசு பஸ்களின் டீசல் பாக்கிக்கு ரூ.100 கோடி வழங்கிய அரசு