அரசு பஸ்களின் டீசல் பாக்கிக்கு ரூ.100 கோடி வழங்கிய அரசு
பெங்களூரு: அரசு பஸ்களுக்கு வழங்கப்பட்ட டீசல் பாக்கி அதிகரித்தால், பல டிப்போக்களில் பஸ்கள் சும்மா நிறுத்தியுள்ளனர். இதனால், பயணியர் பாதிப்படைகின்றனர். இதையறிந்த மாநில அரசு, பஸ்களுக்கு டீசல் வாங்க, 100 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
கொப்பால் மற்றும் விஜயபுரா மாவட்டங்களில், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களுக்கு டீசல் பற்றாக்குறை ஏற்பட்டது. பெட்ரோலிய நிறுவனங்களுக்கு, டீசல் பாக்கி இருந்ததால், அந்த நிறுவனங்கள் டீசல் வினியோகத்தை நிறுத்தின. இதன் விளைவாக பஸ்களை இயக்க முடியாமல், டிப்போக்களில் நிறுத்தினர். பஸ் போக்குவரத்து இல்லாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், ஊழியர்கள் என, பலரும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதன்பின் நடவடிக்கை எடுத்த மாநில அரசு, நான்கு போக்குவரத்து கழகங்களின் பஸ்களுக்கு டீசல் வாங்க, 100 கோடி ரூபாயை நேற்று வழங்கியது.
இதில், கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு, 18.90 கோடி ரூபாய், பி.எம்.டி.சி.,க்கு 62.53 கோடி ரூபாய், வடமேற்கு போக்குவரத்து கழகத்துக்கு 7.96 கோடி ரூபாய், கல்யாண கர்நாடகா போக்குவரத்து கழகத்துக்கு, 10.61 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி அதியமான் பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்பு
-
மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
-
கனிமங்கள் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்
-
திருப்பதிக்கு பக்தர்கள் பாத யாத்திரை
-
வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகள் உள்பட 4 பேர் கைது
-
பள்ளி வழிப்பாதைக்கு பேச்சுவார்த்தை தோல்வி பெற்றோர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு