கனிமங்கள் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்
ஓசூர்: ஓசூர் பகுதியில், கனிமங்கள் கடத்திய, 5 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஜூஜூவாடி போக்குவரத்து சோதனைச்சாவடி அருகே, ஜூஜூவாடி வி.ஏ.ஓ., திம்மராயன் மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த
போது, புக்கசாகரத்திலிருந்து, கர்நாடகாவிற்கு, 6 யூனிட் எம்.சாண்ட் கடத்தியது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிப்காட் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., திம்மராயன் புகார்படி, லாரி டிரைவரான, சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே வெள்ளாளப்பட்டி கே.எஸ்.எஸ்.ஆர்., நகரை சேர்ந்த மொய்தீன் ஹூசைன், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். லாரி உரிமையாளரான, கர்நாடகா மாநிலம், பேகூரை சேர்ந்த வீரமணியை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை உதவி புவியியலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள், சம்பங்கிரி சோதனைச்சாவடி மற்றும் பாகலுார் - பேரிகை சாலையிலுள்ள குடிசெட்லு பஸ் ஸ்டாப் அருகே நடத்திய வாகன சோதனையில், கர்நாடகாவுக்கு, 13 யூனிட் எம்.சாண்ட் கடத்திய, 2 லாரிகள் மற்றும் கற்கள் கடத்திய ஒரு லாரியை பறிமுதல் செய்து, பாகலுார் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். உதவி புவியியலாளர் சரவணன் புகார்படி, லாரிகளின் டிரைவர்கள், உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
அஞ்செட்டி அருகே அர்த்தக்கல் பகுதியில், தக்கட்டி வி.ஏ.ஓ., முனிராஜ் மற்றும் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், சட்டவிரோதமாக, 2 யூனிட் கற்கள் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, அஞ்செட்டி ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. வி.ஏ.ஓ., புகார்படி, லாரி டிரைவர், உரிமையாளர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
-
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்