வணிக மனை விற்பனை விண்ணப்பிக்க அவகாசம்

கடலுார்: வீட்டு வசதி வாரிய வணிக மனை விற்பனைக்கான மின்னணு ஒப்பந்தபுள்ளி ஏலத்திற்கு, விண்ணப்பிக்க வரும் 14ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

விழுப்புரம் வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டத்திலுள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதி–I, மகாராஜபுரம், சாலமேடு, வெளிச்செம்மண்டலம், வில்வராய நத்தம், திட்டப்பகுதிகளில் விற்பனைக்காக உள்ள 17 வணிக மனைகள், விற்பனைக்கான மின்னணு ஒப்பந்தபுள்ளி விண்ணப்பத்திற்கான கால அவகாசம் வரும் 14ம் தேதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

Advertisement