டிராக்டர் மீது பைக் மோதி ஹோட்டல் ஊழியர் பலி
உளுந்துார்பேட்டை: உளுந்தம்பட்டி தாலுகா களத்துார் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பாலமுருகன், 36; இவர் உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலை, 5:20 மணியளவில் சேந்தநாடு பகுதியில் இருந்து களத்துார் நோக்கி பைக்கில் சென்றார்.
களத்துார் ஏரிக்கரை அருகே சென்றபோது, எதிரே அதே பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் பிரபு, 22; ஓட்டி வந்த டிராக்டர் மீது பைக் மோதியது. இதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement