சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 100 அடியை கடந்தது: விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்: தொடர்மழையலா பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் மூன்று நாட்களில் 17 அடி உயர்ந்து, அணையின் நீர்மட்டம் 101 அடியாக உயர்ந்தது.

பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழை மற்றும் நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு தண்ணீர் வருகிறது. அணையின் மொத்த உயரம் 126.28 அடி. கடந்த வாரம் 75.44 அடியாக இருந்தது. தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் அக்.7ல் 81.02 அடியாக இருந்தது. மழைபகுதிகளில் பெய்த கனமழையால் நீர் வரத்து அதிகரித்து மூன்று நாட்களில் நீர்மட்டம் 17அடி உயர்ந்து நேற்று 101.02 அடியாக இருந்தது. நீர் வரத்து வினாடிக்கு 52 கன அடியாகவும், பெரியகுளம் பகுதி குடிநீருக்கு வினாடிக்கு 3 கன அடி வெளியேற்றப்படுகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

அணையிருந்து ஒவ்வொரு ஆண்டும்: 20க்குள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்தாண்டு தண்ணீர் திறக்கவில்லை. இந்தாண்டு அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்து உயர்ந்து வருகிறது. இதனால் நீர் திறப்பதற்கான சூழல் உருவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement