தம்மாம் ஏர்போர்ட் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல்: சவுதி அரேபியாவில் பதற்றம்
ரியாத்: சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய நகரான தம்மாமிலும் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் புதிய தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப் படைகளுக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. சமீபத்தில் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதிகள் தொடர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தினர். இதில் இந்தியர் ஒருவர் உட்பட 13 பேர் பலியாகினர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தம்மாம் மீது தாக்குதல்:
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் வளம் மிக்க தொழில் நகரமான தம்மாமில் உள்ள, கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், தம்மாம் கிங் பஹத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஆய்வுப் பணிகள் மற்றும் சேத மதிப்பீடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
மிரட்டல்:
சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும், விமானப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறும் ஹவுதி படைகள் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
தமிழை போற்றும் மோடி; பிரிவினையை தூண்டும் ராகுல்!: பா.ஜ., கடும் குற்றச்சாட்டு
-
எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நிறுத்தம்; அதிபர் டிரம்ப் தலையீடுக்கு பிரிட்டன் ஆதரவு
-
துவங்கியது நவராத்திரி கொண்டாட்டம்; பாரம்பரிய நடனமாடி பக்தர்கள் மகிழ்ச்சி
-
இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு முக்கியம்: ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
-
உச்சநீதிமன்றம் நோக்கி இன்று ராகுல் பேரணி: டில்லியில் 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்
-
கிராவல் மண் எடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்பு; ஒப்பந்ததாரர்கள் கொடுக்காததால் பணிகள் நிறுத்தம்