எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நிறுத்தம்; அதிபர் டிரம்ப் தலையீடுக்கு பிரிட்டன் ஆதரவு
-நமது நிருபர்-
ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் எரிசக்தி போர்நிறுத்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப் தலையீடுக்கு பிரிட்டன் ஆதரவு தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து நீண்டு கொண்டே வருகிறது. ரஷ்யாவில் உள்ள எரிசக்தி நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகளை உக்ரைன் குறிவைத்து தாக்கி வருகிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
தற்போது, எரிசக்தி நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம்
கூறியதாவது:
எரிசக்திப் போர்நிறுத்தம் இப்போதே தொடங்க வேண்டும் என்ற அதிபர் டிரம்பின் அழைப்பை பிரிட்டன் ஆதரிக்கிறது. இது குறித்து நான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் விவாதித்தேன்.
ரஷ்யா தனது தாக்குதல்களை நிறுத்தினால், உக்ரைன் தாக்குதலை நிறுத்த தயாராக உள்ளது என்றார். உலகச் சந்தைகளுக்கு தடைகள் இல்லாமல் எரிபொருளையும் மீண்டும் கொண்டு சேர்ப்பதற்கு இதுவே சிறந்த வழியாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு; ஆர்பிஐ முயற்சிக்கு கிடைத்தது பலன்
-
மகாராஷ்டிராவில் 50 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: பழ மரங்களை காப்பாற்ற விவசாயிகள் பகீரத முயற்சி
-
பிரதமர் வருகையின் போது மரபை கடைபிடித்துள்ளார் முதல்வர் விஜய்; நயினார் நாகேந்திரன்
-
2100க்குள் மனித இனமே அழிந்து விடும்; லான்செட் ஆய்வறிக்கையில் பகீர்
-
எதிர்க்கட்சிகளின் செயல் சுத்த முட்டாள் தனம்; ஹரீஷ் சால்வே காட்டம்
-
மதுபாட்டில்களை திரும்பப்பெறும் டெண்டர் மீது இறுதி முடிவெடுக்கக் கூடாது; உயர்நீதிமன்றம்