அரசு பஸ்சில் குட்கா கடத்தி விற்ற கண்டக்டர் கைது

கலசப்பாக்கம்: அரசு பஸ்சில், குட்கா கடத்தி விற்ற கண்டக்டர் சிவானந்தம், 52, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம், எர்ணாமங்கலத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவர், போளூரில் இருந்து, பெங்களூரு செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக பணிபுரிகிறார்.

பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து, கலசப்பாக்கம் பகுதி பெட்டிக்கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். இதுகுறித்து, கலசப்பாக்கம் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, போளூர் – செங்கம் சாலையில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

காங்கேயனுார் அருகே பைக்கில், 30 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்கு எடுத்து சென்ற சிவானந்தத்தை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement