மதுபாட்டில்களை திரும்பப்பெறும் டெண்டர் மீது இறுதி முடிவெடுக்கக் கூடாது; உயர்நீதிமன்றம்
சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக, டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனையாகும் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, காலி பாட்டில்களை திரும்பப் பெற, ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த மெஷின்களை நிறுவி, செயல்படுத்த, கடந்த ஆக.,31மி தேதி டெண்டர் கோரப்பட்டது.
இந்தத் திட்டத்தை எதிர்த்து பாட்டில் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மாநிலம் முழுதும் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் அமைக்க ஒரே நிறுவனத்தை இப்பணிக்கு நியமிக்க அரசு முடிவு எடுத்துள்ளது. நீட்டிப்பு காலத்துடன் சேர்த்து மொத்தம் 10 ஆண்டுக்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறது. இதனால், பல ஆண்டுகளாக காலி பாட்டில்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் நேரடியாக பாதிக்கப்பட இருக்கிறார்கள். ஒரே நிறுவனத்திற்கு பதில், மாவட்ட வாரியாக டெண்டரை பிரித்து வழங்க உத்தரவிட வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுபாட்டில்களை திரும்பப்பெறும் டெண்டர் மீது இறுதி முடிவெடுக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெண்டர் நிபந்தனைகளை பூர்த்தி செய்வோர் டெண்டரில் கலந்து கொள்ள எந்தத் தடையும் இல்லை. டெண்டரில் எத்தனை பேர் பங்கேற்றனர் என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்.,26க்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும்
-
உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: வேளாண் பல்கலை பேராசிரியர்கள் தேர்வு
-
கிரானைட் வீரமணி வீட்டில் 55 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
-
பாக்., பயங்கரவாதி கூட்டாளிகள் ஈரோடு, திருப்பூரில் பதுங்கல்: என்.ஐ.ஏ., வலை
-
விழுப்புரம், கண்டமங்கலம் கோட்டத்தில் சூரிய வீடு மின்சார திட்ட விழிப்புணர்வு முகாம்
-
சவுதியில் பணியாற்றிய பெண்ணிகளின் நிலை தெரியாமல் புதுச்சேரியில் உறவினர்கள் கதறல்
-
பெண்கள் சாலை மறியல்