தந்தைக்கு மது கொடுத்து கொன்ற மகன் கைது
ஆரணி: சொத்து தகராறில், பிச்சமுத்து, 45, என்பவருக்கு, மது கொடுத்து கொன்ற அவரது மகன் ஆகாஷ், 21, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, அரையாளத்தை சேர்ந்தவர் பிச்சமுத்து; விவசாயி. இவரது மனைவி பானுமதி, 42. தம்பதிக்கு, இரு மகள்களும், ஆகாஷ், 21, என்ற மகனும் உள்ளனர். ஆகாஷ், தச்சூர் சமத்துவபுரத்தில், சிக்கன் கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளது.
பிச்சமுத்து, ஆகாஷுக்கும் ஏற்பட்ட சொத்து தகராறில், ஆரணி போலீசார், இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஆகாஷ் கடைக்கு சென்ற பிச்சமுத்து, மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, இருவரும், அதே பகுதியில் உள்ள காலி மைதானத்தில், மது அருந்தியுள்ளனர்.
அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், பிச்சமுத்துவை, ஆகாஷ் கத்தியால் வெட்டியதில், உயிரிழந்தார். அதன்பின், அவர் அணிந்திருந்த வேட்டியை எடுத்து, சடலத்தின் மீது போர்த்தி விட்டு, வீட்டுக்கு சென்று விட்டார்.
ஆரணி போலீசார், ஆகாஷை, கைது செய்தனர்.
மேலும்
-
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல்மிக்க நகரங்கள் பட்டியலில் பெங்களூரு, புனே
-
திமுகவுக்கு முதலிடம் வேண்டாமா? திருமா கேள்விக்கு பதிலளிக்க ஸ்டாலின் மறுப்பு
-
கிருஷ்ணகிரியில் அக்டோபர் 22ல் "வீ தி லீடர்ஸ்' மகளிர் மாநாடு; பங்கேற்கிறார் அண்ணாமலை
-
வாய்ச்சொல் வீரர், 99 தேர்தலில் தோல்விகள்; ராகுலை விளாசிய பாஜ
-
ஐசியூவில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே
-
ஜனநாயக அமைப்பை அழிக்க விரும்பும் காங்கிரஸ்; மத்திய அரசு குற்றச்சாட்டு