மேற்கு ஆசிய நெருக்கடி; விமான எரிபொருள் விலை அதிகரிப்பால் நீடிக்கும் சவால்!
-நமது நிருபர்-
மேற்கு ஆசிய நெருக்கடி காரணமாக விமான எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஒரு சவாலாகவே நீடிக்கிறது என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: விமான எரிபொருள் விலை நிர்ணயம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது; மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி காரணமாக இதன் விலையில் பெரும் ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன. இது விமானக் கட்டணங்களைப் பாதிக்கிறது.
நாங்கள் கட்டணங்கள் நியாயமான அளவில் வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய விமான நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; குறிப்பாகப் பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து முன்னெடுக்கும்.
தற்போது தொடங்கி ஜனவரி மாதம் வரை நாட்டில் அடுத்தடுத்துப் பல பண்டிகைகள் வர உள்ள நிலையில், விமான நிறுவனங்களுடன் இணைந்து கட்டணங்களை முடிந்தவரை நியாயமான அளவில் வைத்திருப்பதே எங்கள் நோக்கமாகும்.
இருப்பினும், மேற்கு ஆசிய நெருக்கடி காரணமாக விமான எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஒரு சவாலாகவே நீடிக்கிறது. இவ்வாறு ராம் மோகன் நாயுடு கூறினார்.
மேலும்
-
ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை: புகார் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்' எண் அறிமுகம்
-
வரி பாக்கியை அபராதம் இன்றி செலுத்த அரசு திட்டம் தயார் செய்ய வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் கோரிக்கை
-
அரசுத் துறை ஓய்வு பெற்றோர் குறைகேட்புக் கூட்டம்
-
முத்து விநாயகர் கோவில் குளம் புனரமைக்கும் பணி :ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
-
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 16ம் தேதி தனியார் துறை முகாம்
-
சோலார் விண்ணப்ப சிறப்பு முகாம்