ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை: புகார் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்' எண் அறிமுகம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பாக புகார் இருந்தால் அதை வாட்ஸ் ஆப் எண் மூலமாக தெரிவிக்கலாம் என மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக செய்திக்குறிப்பு:
உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தவும், நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் கூட்டுறவுத் துறை கீழ் கட்டுப்பாட்டில் செயல்படும் 8,914 நகர்ப்புற ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பான புகார்கள் மற்றும் குறைகள் இருந்தால், பொதுமக்கள் 96005 61969 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் புகார்கள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வரி பாக்கியை அபராதம் இன்றி செலுத்த அரசு திட்டம் தயார் செய்ய வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் கோரிக்கை
-
அரசுத் துறை ஓய்வு பெற்றோர் குறைகேட்புக் கூட்டம்
-
முத்து விநாயகர் கோவில் குளம் புனரமைக்கும் பணி :ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
-
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 16ம் தேதி தனியார் துறை முகாம்
-
சோலார் விண்ணப்ப சிறப்பு முகாம்
-
காமராஜர் அரசு கல்லுாரியில் கிராமிய நிகழ்ச்சி