முத்து விநாயகர் கோவில் குளம் புனரமைக்கும் பணி :ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி: சாரம் முத்து விநாயகர் கோவில் பூங்குளத்தை 20 லட்ச ரூபாய் செலவில், புனரமைக்கும் பணியை, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

சாரம் முத்து விநாயகர், சுப்ரமணியர் சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் பூங்குளத்தை மறு கட்டமைப்பு செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ., ஜோஸ் சார்லஸ் மார்ட்டினிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அவரது பரிந்துரையின் படி, 'அவர் ஷோல்டர்ஸ் பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனம் மூலமாக 20 லட்ச ரூபாய் செலவில், மறு கட்டமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக ஜோஸ் சர்லஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து குளம் புனரமைக்கும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., ரிச்சர்டு, ஊர் பெரியவர்கள் ராம்குமார், திவாகர், விஸ்நாதன், கணேசன், தணிகைவேல் குமார், ரவி, பாலன், சூர்யா, ரமேஷ், பாலா, சுகுமார், கோபி, வீரராகவன், ஆகியோர் கந்து கொண்டனர். ஏற்பாடுகளை, தேஸ்தான நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் செய்திருந்தார்.

Advertisement