அரசுத் துறை ஓய்வு பெற்றோர் குறைகேட்புக் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசு துறையில் ஓய்வு பெற்றோரின் குறைகேட்புக் கூட்டம் வரும் நவம்பர் 20ம் தேதி நடக்கிறது.

கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகேட்புக் கூட்டம் வரும் நவம்பர் 20ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு எனது தலைமையில் சென்னை இயக்குனரால் (ஓய்வூதியம்) நடத்தப்படுகிறது.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் தங்களது விண்ணப்பங்களை ஓய்வூதியர்கள் குறை தீர்ப்பு நாள் மனு என குறிப்பிட்டு, கலெக்டர் அலுவலகம், கள்ளக்குறிச்சி மாவட்டம் என்ற முகவரியிட்டு, நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ, வரும் நவம்பர் 8ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement