வரி பாக்கியை அபராதம் இன்றி செலுத்த அரசு திட்டம் தயார் செய்ய வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் கோரிக்கை
புதுச்சேரி: நகராட்சி வரிபாக்கிய அபராதம் இல்லாமல் செலுத்த வழிவகைகளை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும், பல கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி இருக்கிறது. அதனை வசூலிப்பதற்கான முயற்சிகளில் அந்தந்த நகராட்சிகள் களம் இறங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்தந்த ஆணையர்களுக்கும் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கலாம் என அதிகாரம் இருக்கின்றது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ. 10 ஆயிரத்திற்கு 10 சதவீதம் அபராதம் என்றால், சில பேர் 3, 5 ஆண்டுகள் கட்டாமல் உள்ளனர். அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலிக்க வேண்டிய சூழல் ஏற்படும். குறிப்பாக, உழவர்கரை நகராட்சியில் ரூ.12 கோடியும், காரைக்காலில் 6 கோடியும் பாக்கி தொகை உள்ளது.
அதை வசூலிப்பதற்கு வரும் ஜனவரி 1ம் தேதிக்குள் யாரெல்லாம் வரி பாக்கியை செலுத்த உள்ளனரோ அவர்களுக்கு, சிறப்பு முகாமினை நடத்தி குறிப்பிட்ட காலகெடு விதித்து, எந்தவிதமான அபராதமும் இல்லை என அறிவித்தால் அந்த தொகை முழுமையாக வந்து சேரக்கூடிய வாய்ப்பு உருவாகும்.
எனவே வரி பாக்கி வசூல் தொடர்பாக சில திட்டங்களை தயார் செய்து, அதன் அடிப்படையில் வசதிகளை செய்து கொடுத்தால் நகராட்சிக்கு வரக்கூடிய பணமும், பொதுமக்களுக்கும் ஆர்வத்தோடு வரி பாக்கியை செலுத்த முன்வர்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும்
-
மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
-
செவன்த் டே பள்ளியில் அறிவியல் கண்காட்சி
-
மேலாளரை கத்தியால் குத்திய டிரைவர், கண்டக்டர் கைது
-
கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி விற்க முடிவு: விலை உயர்வை சமாளிக்க திட்டம்
-
நவம்பரில் மதுரை புத்தகத் திருவிழா: நவ.13 முதல் நடத்த திட்டம்
-
குப்பையை தரம்பிரித்து வழங்காத கடையின்தொழில் உரிமம் ரத்து: நகராட்சி எச்சரிக்கை