வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 16ம் தேதி தனியார் துறை முகாம்

விழுப்புரம்: மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வரும் 16ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 16ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், 20க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை ஐ.டி.ஐ., - டிப்ளமோ, பொறியியல், பி.டெக்., நர்சிங், பார்மசி போன்ற கல்வித் தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் பங்கேற்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement