வங்கதேச அணி முன்னிலை

அபுதாபி: அபுதாபி சென்றுள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் ஒரே ஒரு டெஸ்டில் விளையாடுகின்றன. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 346 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 211/4 ரன் எடுத்திருந்தது.

நேற்று, மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஹ்மத் ஷா, தனது 4வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த போது இக்ரம் அலிகில் (32) அவுட்டானார். ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 240 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ரஹ்மத் ஷா (105) அவுட்டாகாமல் இருந்தார்.

பின் 2வது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (82), முஷ்பிகுர் ரஹிம் (81) நம்பிக்கை தந்தனர். ஆட்நேர முடிவில் வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 223/6 ரன் எடுத்து, 329 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

Advertisement