மருத்துவமனை சாலையில் ஆக்கிரமிப்பு வாகனங்களால் நோயாளிகள் அவதி
மதுராந்தகம்: மதுராந்தகம் நகர்ப்புற அரசு ஆரம்ப மருத்துவ நிலையத்திற்கு செல்லும் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில், வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது.
அங்கு போதிய இடவசதி இல்லாததால், அய்யனார் கோவில் சந்திப்பு பகுதியில், புதிதாக வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வட்டாட்சியர் பழைய அலுவலகம் இடித்து அகற்றப்பட்டு, 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நகர்ப்புற ஆரம்ப மருத்துவ நிலையம் கட்டப்பட்டு, கடந்த பிப்., மாதம் பயன்பாட்டிற்கு வந்தது. அதை தொடர்ந்து மருத்துவ நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையில், கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள கடை மற்றும் சார் – பதிவாளர் அலுவலகத்திற்கு வருவோர், மருத்துவ நிலையத்தின் சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், மருத்துவ நிலையத்திற்கு வரும் புறநோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவமனைக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, மருத்துவ நிலை ய சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
திருநங்கைகள், பெண்களுக்காக வருகிறது பிங்க் இ-ஆட்டோ திட்டம் ; டில்லி அரசு அறிமுகம்
-
வாக்காளர் பட்டியலில் பகத்சிங் படம்: வெடித்தது புதிய சர்ச்சை
-
அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் துக்காராமுக்கு கூடுதல் பொறுப்பு; அரசு அமைத்த குழுவில் செயலாளராக நியமனம்
-
தமிழை போற்றும் மோடி; பிரிவினையை தூண்டும் ராகுல்!: பா.ஜ., கடும் குற்றச்சாட்டு
-
தம்மாம் ஏர்போர்ட் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல்: சவுதி அரேபியாவில் பதற்றம்
-
எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நிறுத்தம்; அதிபர் டிரம்ப் தலையீடுக்கு பிரிட்டன் ஆதரவு