திருப்பரங்குன்றம் மலை மேல் திருவிழாவில் சமைக்கும் பிரச்னைக்கு பா.ஜ., காரணம்: அமைச்சர் நிர்மல்குமார் சாடல்
அவனியாபுரம்: ‘‘திருப்பரங்குன்றம் மலை மேல் திருவிழாவில் சமைக்கும் பிரச்னைக்கு பா.ஜ., தான் காரணம்,’’ என, மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்திருந்தார். தேவையான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். கட்சி முக்கியஸ்தர்களை பிரபலப்படுத்த அரசு நிகழ்ச்சிகளை பயன்படுத்தக் கூடாது. மத்திய அரசின் நிகழ்ச்சியில் பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனை அமர வைப்பது தவறான முன் உதாரணம். எம்.எல்.ஏ., எம்.பி., இல்லாத ஒருவரை எப்படி அமர வைக்கலாம். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில் எங்கள் கட்சி நிர்வாகிகளை செல்லக்கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.
இடைத்தேர்தலில் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெறலாம் என்ற மனப்பான்மை மாற வேண்டும். மக்கள் தங்களுக்கு யார் வேண்டும் என முடிவு செய்தனர். அதனால் முதல்வர் விஜய்யை நம்பி த.வெ.க., விற்கு வெற்றியை கொடுத்துள்ளனர்.
இரு நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலை மேல் திருவிழாவில் சமையல் செய்ய வேண்டும் என கேட்டனர். பிரச்னை ஏற்பட்டது. இதுவரை இதுபோன்ற பிரச்னை வந்ததில்லை. அமைதியாக கோயிலில் சென்று பூஜை செய்து சமையல் செய்து வந்தனர். எந்த பிரச்னையும் இன்றி நடந்து வந்தது. பா.ஜ., எப்போது தலையிட்டனரோ அன்று முதல் அனைவரின் நிம்மதியும் கெட்டுவிட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலை மேல் பூஜை செய்வதற்கு மக்கள் எல்லையில்லா துன்பம் அடைந்தனர். திருப்பரங்குன்றம் மக்கள் இதுவரை மலையில் சென்று சுவாமி கும்பிட்டு வந்தனர். தர்காவில் அவர்கள் வழிபட்டு வந்தனர். எப்போதாவது பிரச்னை வந்ததா. எப்போது பா.ஜ., உள்ளே வந்ததோ அன்றோடு மக்களின் அமைதி தொலைந்து விட்டது. ஒவ்வொரு விஷயத்திற்கும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. பா.ஜ., எங்கு சென்றாலும் இருக்கின்ற பிரச்னையை பெரிதாக்கி மக்களின் அமைதியை கெடுத்து அரசியல் செய்கின்றனர். இதுபோன்ற விஷயங்களில் தலையிட்டு மக்களின் அமைதியை கெடுக்க விரும்பினால் அந்த அரசியலை தமிழகத்தில் பா.ஜ., தவிர்க்க வேண்டும்.
எங்கு மின் பிரச்னைகள் இருக்கிறதோ உடனடியாக கண்டறிந்து தீர்வு காணப்படுகிறது. மின் தட்டுப்பாடு இருக்கிறது. இந்தியா முழுவதும் பிரச்னை உள்ளது. தமிழகத்தில் மின்சாரம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளையும் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மின் பற்றாக்குறையை சமாளிக்க வெளியில் இருந்து மின்சாரம் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சேர்ந்து பயணம் செய்தது தமிழக மக்களின் நலனுக்காகத்தான். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் முன் வைத்துள்ளார் என்றார்.
மேலும்
-
ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலிப்பு: வடபழனி முருகன் கோவிலில் சக்தி கொலு தொடக்கம்
-
இடைத்தேர்தல் முடிவுகளால் ஆளும் கட்சிகள் உற்சாகம்!
-
வடிவுடையம்மன் கோவில் ஆதிசேஷ குளத்தில் தீ
-
கிழக்கு கோபாலபுரம் சாலையில் குடிநீர் வாரிய பணியால் அவதி
-
மருத்துவமனை சாலையில் ஆக்கிரமிப்பு வாகனங்களால் நோயாளிகள் அவதி
-
களக்காட்டூரில் பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்: சீரமைக்க மக்கள் கோரிக்கை