அரசு செயலர் திடீர் மாற்றம்
புதுச்சேரி: சென்னை மெட்ராஸ் பெர்ட்டிலைசர்ஸ் நிறுவனத்தின் தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி முத்தம்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி முத்தம்மா; பொதுப் பணித் துறை, மின் துறை, உள்பட பல்வேறு துறைகளை கவனித்து வந்தார். இந்நிலையில் மத்திய அரசுப் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி முத்தம்மாவை சென்னை மெட்ராஸ் பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக நிய மித்து உத்தரவிட்டுள்ளது.
அவர், பதவியேற்கும் நாளிலிருந்து ஆரம்பக் கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை இவற்றில் எது முந்தையதோ அதுவரை இந்தப் பதவியில் தொடர்வார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது புதிய பணியை உடனடியாக ஏற்கும் வகையில் அவரை விடுவிக்குமாறு உள்துறை அமைச்சகத்தின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு செயலர் முத்தம்மா ஏற்கனவே இப்பணிக்கு விண்ணப்பித்து இருந்தார். அதன் அடிப்படையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, புதுச்சேரி அரசில்இருந்து அவர் விடுவிக்கப்படுகிறார்.
மேலும்
-
உள்ளாட்சி தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும்: அண்ணாமலை
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மாவட்டத்தில் 2,334 பேர் விண்ணப்பம்
-
நிற்காமல் செல்லும் அரசு டவுன் பஸ்கள் சரக்கு வேனில் செல்லும் மாணவர்கள்: கலெக்டர் கவனிப்பாரா?
-
புத்தக கண்காட்சிக்கு ரூ.8.45 கோடி ஒதுக்கீடு
-
ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
-
பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம் பகுதிகளில் மின்தடை