ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சின்னமனூர்: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி சின்னமனூரில் ஹிந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் சுந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். நகர் செயலாளர் சுருளி முத்து வரவேற்றார். கோட்ட பொறுப்பாளர் கோம்பை கணேசன், மாவட்ட செயலாளர்கள் மாயலோகநாதன், ஆச்சி கார்த்தி, ரெங்கசாமி, கணேஷ் குமார், கோட்ட இணைய தள பொறுப்பாளர் ராம் செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் இருந்து ஹிந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Advertisement