புத்தக கண்காட்சிக்கு ரூ.8.45 கோடி ஒதுக்கீடு
சிவகங்கை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த அரசு ரூ.8.45 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் 2022-–2023ம் ஆண்டு முதல் மாவட்டந்தோறும் கலெக்டர் தலைமையில் குழு அமைத்து புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் கண்டுபிடிப்புகளும் இடம்பெறுகின்றன. இது தவிர கண்காட்சி நாட்களில் மாணவர்களுக்கு வினாடி வினா உட்பட கலை மற்றும் அறிவு சார்ந்த போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் 2026–2027ம் ஆண்டிற்கும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.8.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டங்களை 3 விதமாக பிரித்து புத்தக கண்காட்சி நடத்த அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 'ஏ'- பிரிவில் உள்ள 7 மாவட்டங்களுக்கு தலா ரூ.17.50 லட்சம், 'பி' பிரிவில் உள்ள 7 மாவட்டங்களுக்கு தலா ரூ.14 லட்சம், 'சி' பிரிவில் உள்ள 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.12 லட்சம் என ஒட்டுமொத்தமாக அரசு ரூ.8.45 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்றனர்.
மேலும்
-
சிறப்பு பக்கத்திற்கு................. மின்வெட்டு ஏற்படுவது உண்மையா? தமிழக அரசு ரகசிய கண்காணிப்பு
-
பட்டாக்களில் தொடரும் பிழைகளுக்கு 26 ஆண்டுக்கு பின் வருகிறது விமோசனம்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி
-
பட்டாசுகள் கையாள்வதில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை
-
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கட்டுமான பொருட்கள் சப்ளை: கேரள முதல்வர் சதீசன் தகவல்
-
எம்.எல்.ஏ., பிறந்த நாள் அமைச்சர் நேரில் வாழ்த்து