கணவர் மீது டீசல் ஊற்றி தீ வைத்த மனைவி மீது வழக்கு
காரைக்கால்: திருநள்ளாறு, சுரக்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், 46; கொத்தனார். இவரது மனைவி ஜோதி; இவர்களின் இரண்டு மகன்கள் படித்து வருகின்றனர்.
செல்வத்துக்கு மது பழக்கம் இருந்ததால், கணவன், மனைவி இடையே கடந்த ஒரு வாரமாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு துாங்கச் சென்ற செல்வம், தனது மொபைல் போன் சார்ஜரை காணவில்லை என, ஜோதியிடம் கேட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், வாகனத்தைக் கழுவுவதற்காக பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்திருந்த டீசலை செல்வத்தின் மீது ஜோதி ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
தீக்காயமடைந்த செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த திருநள்ளார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரித்தனர்.
புகாரின் பேரில், ஜோதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
உள்ளாட்சி தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும்: அண்ணாமலை
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மாவட்டத்தில் 2,334 பேர் விண்ணப்பம்
-
நிற்காமல் செல்லும் அரசு டவுன் பஸ்கள் சரக்கு வேனில் செல்லும் மாணவர்கள்: கலெக்டர் கவனிப்பாரா?
-
புத்தக கண்காட்சிக்கு ரூ.8.45 கோடி ஒதுக்கீடு
-
ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
-
பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம் பகுதிகளில் மின்தடை