செயின் திருடிய பெண் கைது
அக். 12–: செஞ்சியை அடுத்த பாக்கம் கிராமத்தை சேர்ந்த முத்து மனைவி இருசம்மாள், 55.
இவர் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் அமாவாசை இரவு ஊஞ்சல் உற்சவத்திற்கு வந்திருந்தார். அங்கு, இரவு 1:00, மணிக்கு இருசம்மாள் கழுத்திலிருந்த 3 சவரன் தங்க செயினை பெண் ஒருவர் பறித்துக்கொண்டு ஓட முயன்றார். பெண் கூச்சல் போடவே, அங்கிருந்த பக்தர்கள் அப்பெண்ணை ந்த பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் சமயபுரத்தை சேர்ந்த மகேஸ்வரி, 49, என தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து மகேஸ்வரியை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உள்ளாட்சி தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும்: அண்ணாமலை
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மாவட்டத்தில் 2,334 பேர் விண்ணப்பம்
-
நிற்காமல் செல்லும் அரசு டவுன் பஸ்கள் சரக்கு வேனில் செல்லும் மாணவர்கள்: கலெக்டர் கவனிப்பாரா?
-
புத்தக கண்காட்சிக்கு ரூ.8.45 கோடி ஒதுக்கீடு
-
ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
-
பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம் பகுதிகளில் மின்தடை
Advertisement
Advertisement