குழந்தையுடன் தாய் மாயம்

பர்கூர்: கிருஷ்ணகிரி ராசு வீதியை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி ஷாஜியா, 27. இவர்களுக்கு, தானிஷ், 4, என்ற ஆண் குழந்தை உள்ளது.

தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கடந்த மாதம், 28ம் தேதி, பர்கூர் அருகே ஜிட்டோபனப்பள்ளியிலுள்ள தன் தாய் வீட்டிற்கு குழந்தையுடன் ஷாஜியா சென்று விட்டார். அங்கிருந்து கடந்த, 1ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, குழந்தையை எடுத்து கொண்டு தன் கணவர் வீட்டிற்கு செல்வதாக கூறி புறப்பட்ட ஷாஜியா, அங்கு செல்லாமல் மாயமானார். அவரது தாய் ராஜியா, 43, புகார்படி, பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான ஷாஜியா மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.

Advertisement