டூவீலரில் இருந்து விழுந்த மூதாட்டி பலி
குமாரபாளையம்:ஈரோடு
மாவட்டம், திருவேங்கடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி, 67.
இவர், குமாரபாளையத்தில் உள்ள தன் மூத்த மகனை பார்ப்பதற்காக, கடந்த,
3ல், இளைய மகனுடன் டூவீலரில் சென்றுள்ளார். பள்ளிப்பாளையம் சாலை,
கவுரி மெஸ் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக
சரஸ்வதி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த சரஸ்வதியை மீட்டு
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு
அவர், நேற்று முன்தினம் மாலை இறந்தார். இதுகுறித்து குமாரபாளையம்
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement