'கஞ்சா' வாலிபர் கைது

பவானி:சித்தோடு அருகே கொங்கம்பாளையம் பஸ் நிறுத்த பகுதியில், சித்தோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு வாலிபரிடம் விசாரித்தனர்.

சித்தோடு ராயபாளையம் புதுார் கவிராஜ், 22, என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Advertisement