மகன் மாயம்: தந்தை புகார்

ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி மாரப்பா முதலாவது வீதியை சேர்ந்த செல்லதுரை மகன் செல்வராகுல், 17; தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவன். தினமும் வேனில் பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார்.

கடந்த, 9ம் தேதி காலை பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தந்தை புகாரின்படி மகனை, அரசு மருத்துவமனை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement