விலை சரிந்தாலும் கை கொடுக்கும் விளைச்சல் சாமந்தி பூ விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் சத்தியமங்கலம், அந்தியூர், கவுந்தப்பாடி உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில், செவ்வந்தி பூ
சாகுபடி செய்யப்படுகிறது. தரத்துக்கேற்ப ஒரு கிலோ பூ, 60 ரூபாய்
முதல் 85 ரூபாய் வரை தற்போது விற்கப்படுகிறது.
இதுகுறித்து
விவசாயிகள் கூறியதாவது: செவ்வந்தி பூ தண்ணீர் பற்றா
க்குறை,
வறட்சியை சமாளித்து வளரும் தன்மையுடையது. அதோடு நாள்தோறும் பூக்களை
பறித்து விற்கமுடியும் என்பதால் வருவாய் கிடைக்கிறது. சொட்டு நீர்
பாசனத்தில் சாகுபடி செய்துள்ளோம். சாகுபடி செய்வதால் நஷ்டமும்
குறைவு என்பதால், விவசாயிகளின் விருப்ப பயிராகவே மாறியுள்ளது.
கவுந்தப்பாடி,
அந்தியூர், சத்தி உள்ளிட்ட பகுதிகளில், நெல்லுக்கு மாற்றாக
விவசாயிகள் செவ்வந்தி பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சில
மாதங்களுக்கு முன் செவ்வந்தி பூ கிலோ, 110 முதல் 150 ரூபாய் வரை விற்று.
தற்போது, 60 ரூபாய் முதல் 85 ரூபாய் வரை மட்டும் விற்கிறது. விலை
குறைந்தாலும், விளைச்சல் அதிகமாக உள்ளதால் நஷ்டமில்லை.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.